பேட்டிங் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் இந்திய வீரர் சுப்மன் கில், இதில் விராட் கோலி 3 மற்றும் ரோஹித் சர்மா 4 ஆவது இடத்தில உள்ளனர்.
சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தமாக 10 நாடுகள் பங்கேற்ற ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது.
உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் ஐசிசி, வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 2 வது இடத்தில் தொடருகிறார்.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4 வது இடத்தில் உள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 4 இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடத்தில் தொடருகிறார். ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் ஒரு இடம் முன்னேறி இந்திய வீரர் முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி 2 வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்களில் பும்ரா 4 வது இடத்திலும், குல்தீப் யாதவ் 7 வது இடத்திலும், முகமது ஷமி 10 வது இடத்திலும் உள்ளனர்.
ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். இதில் இந்திய வீரர் ஜடேஜா 10 வது இடத்தில் உள்ளார்.