திருநெல்வேலி மாவட்டச் செய்தியாளர் முத்துக்குமாரசுவாமி மறைவிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
பாலிமர் செய்தித் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செய்தியாளர் முத்துக்குமாரசுவாமி, நேற்றிரவு செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பும் வழியில், எதிர்பாராவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறேன்.
பாலிமர் செய்தித் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செய்தியாளர் திரு. முத்துக்குமாரசுவாமி அவர்கள், நேற்றிரவு செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பும் வழியில், எதிர்பாராவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறேன்.
அவரைப்… pic.twitter.com/vkhl7iG0PA
— K.Annamalai (@annamalai_k) November 22, 2023
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாலிமர் செய்தித் தொலைக்காட்சி ஊழியர்களுக்கும் மற்றும் அவரது நண்பர்களுக்கும் தமிழக பாஜக
சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!