தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் நேற்று நடைபெற்ற கேரளா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயானப் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
13 வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில் நேற்று மொத்தமாக ஐந்து போட்டிகள் நடைபெற்றது.
அரியானா – சத்தீஷ்காரை ; பஞ்சாப் – மராட்டி ; உத்தரபிரதேசம் – புதுச்சேரி ; ஒடிசா – டெல்லி ; கேரளா-ராஜஸ்தான்.
இதில் கேரளா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்களை எடுத்தது. ஆகையால் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமமாக முடிவடைந்தது.
இதில் கேரளா அணியின் சார்பாக சாதிக் 12 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு நீண்ட நேரமாக கோல் ஏதும் வராமல் இருந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் அக்தர் ஷோயாப் 36 மற்றும் 39 ஆகிய நிமிடங்களில் தனது இரண்டு கோலை பதிவு செய்தார்.
பின்னர் கேரளா அணியின் அபினவ் 49 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன் பின் இரு அணிகளுக்கும் கோல் ஏதும் கிடைக்காததால் இந்த ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.