சென்னை மயிலாப்பூருக்கு ஒரு நீதி, திருச்சி ஶ்ரீ ரங்கத்துக்கு ஒரு நீதியா? எனத் பாஜக மாநில தலைவர் பிரச்சரா பிரிவு குமரி கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
”கடவுள் இல்லை என்பவன் ”முட்டாள்” ஆன்மீகத்தை அறியாதவன் ”காட்டுமிராண்டி”
என்று எழுதி ஒரு பதாகை வைத்தால் அது தவறு என்று சொல்வார்கள்!
யாரையும் ”முட்டாள்” ”அயோக்கியன்” ”காட்டுமிராண்டி” என்று சொல்லக்கூடாது என்னும் கருத்தியலில் அப்படி சொல்வார்கள்! அப்படி சொல்பவர்கள் நியாயமானவர்களா? என்று கேட்டால் ”அவர்கள் நியாயமானவர்கள்” என்பதுதான் சரியான பதிலாக இருக்கமுடியும்!
எனவே, ”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்!
ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி”,
என சொல்பவன் நியாயமற்றவன்!
“கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்”
என்று எழுதி வைப்பவன் நியாயமானவனா? என்று கேட்டால் இந்த கேள்விக்கும் பதில் ”இல்லை” என்பதுதான்!
நம்புகிறவனையோ நம்பாதவனையோ பரப்புகிறவனையோ பரப்பாதவனையோ
“முட்டாள்” ”காட்டுமிராண்டி” ”அயோக்கியன்” என்றெல்லாம் குறிப்பிடுவது தவறுதான்!
இங்கே சென்னையில் மயிலாப்பூரில் யாதவ மகா சபையில், ”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்!
ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி”,
என 20-11-2023 ல் எழுதி வைத்தனர்!
இந்த வாசகத்தை அவர்கள் பல ஆண்டுகளாகவே வைத்துள்ளார்கள் என்றும், ஆனால் இன்றுதான் சிலருக்கு கண்ணில் பட்டதாகவும், கண்ணில் பட்டதும் அவர்கள் திமுக அரசின் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததாகவும்,
உடனே காவல்துறையினரும் நகராட்சி நிர்வாகிகளும் ஜெ.சி.பி என சொல்லப்படும் எந்திரத்தை பயன்படுத்தி அந்த பலகையை பிடுங்கியதாகவும் சொல்லப்படுகிறது!
இந்த அநியாயத்தை கபாலீஸ்வராகிய ஈசனிடம் முறையிடச்சென்ற யாதவ மகா சபையினர் பெண்கள் உட்பட 50 பேரை காலை 11 மணியளவில் கைது செய்து இரவு 7.30 மணி வரை சிறைப்படுத்தி உள்ளனர் காவல்த்துறையினர்!
2006 ல் ஊரெல்லாம் திமுக அரசு தானமாக கொடுத்த அரசு நிலத்தில் தி.க வினர் குறிப்பாக ஹிந்து கோயில்களுக்கு முன்னால் ஈவேரா சிலைகளை வைத்து, ”கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்”
என எழுதி வைத்தனர்!
இந்த வாசகம் வைக்கப்பட்ட நாள்முதல் பல நூறு விண்ணப்பங்கள் நகராட்சி நிர்வாகங்களிடமும் காவல்துறையிடமும் தரப்பட்டுள்ளது!
20-11-2023 அன்று மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் மயிலாப்பூரில் செயல்பட்டதுபோல், இதுவரையில் “கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்”
என்னும் வாசகம் அகற்றப்படவில்லை!
ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் வெண்ணை!
சென்னை மயிலாப்பூருக்கு ஒரு நீதி, திருச்சி ஶ்ரீ ரங்கத்துக்கு ஒரு நீதியா?
கடவுளை நம்பும் உங்கள் மனைவியை முட்டாள் என்று நீங்கள் சொல்லலாம், உங்கள் தாயார் முட்டாள் என்று நீங்கள் சொல்லலாம், ஏன் நீங்களே ஒரு முட்டாள் என்று நீங்களே சொல்லலாம்!
ஆனால், என்னை ”முட்டாள்” என்று நீங்கள் எப்படி சொல்லலாம்?!
இந்த கேள்வியை, சம்மந்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகள், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரிடமும், பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் கேட்டுவருகின்றனர்!
நிர்வாகங்களிடம் இருந்தும், காவல்துறையினரிடம் இருந்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை!
ஆனந்த் வெங்கடேசன் போன்ற நல்ல நீதிபதிகள் இந்த கேள்வியை எழுப்புவார்கள் என நம்புகிறோம்!
சில வழக்கறிஞர்கள் இது தொடர்பாக நீதிமன்ற கதவுகளை இந்த மயிலப்பூர் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி தட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்!
2026 ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்ததும், அந்த வாசகமும் சிலையும் அப்புறப்படுத்தப்படும் என்று மக்கள் தலைவர் அன்ணாமலை அறிவித்திருப்பது, புண்பட்ட நெஞ்சுக்கு ஆறுதலாக உள்ளது என சொல்லி-
”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்!
ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி!”- என நாமும் ஒருமுறை பதிவிட்டு கட்டுரையை முடிவு செய்கிறோம்! எனத் தெரிவித்துள்ளார்.