இந்தியாவில் விமானப் போக்குவரத்துறையில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று. இந்த நிறுவனம், டெல்லி, சென்னை, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், டிஜிசிஏ அதிகாரிகள் கொச்சி, தில்லி, பெங்களூருவில் ஆய்வு மேற் கொண்டபோது, விமானங்களைத் தாமதமாக இயக்குதல், விமானங்கள் ரத்து, பயணிகளுக்கு உரிய வசதி செய்யாதது, உரிய இழப்பீடு வழங்காதது எனத் தொடர் புகாருக்கு ஆளானது தெரிய வந்தது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், பயணிகளின் விமானச் சேவையில் குறைபாடு காரணமாக, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, இதே போன்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.