ஏபிவிபி: தலைவராக டாக்டர் ராஜ்சரண் ஷாஹி - பொதுச் செயலாளராக ஸ்ரீயாக்வால்கா சுக்லா மீண்டும் தேர்வு
Mar 19, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏபிவிபி: தலைவராக டாக்டர் ராஜ்சரண் ஷாஹி – பொதுச் செயலாளராக ஸ்ரீயாக்வால்கா சுக்லா மீண்டும் தேர்வு

Sivasubramanian P by Sivasubramanian P
Nov 23, 2023, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் முன்னணி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 2023-24 -ஆம் ஆண்டிற்கான தேசிய தலைவராக உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜ்சரண் ஷாஹி-யும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீயாக்வால்கா சுக்லா பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஏபிவிபியின் மத்திய அலுவலகத்தைச் சேர்ந்த தேர்தல் அதிகாரி பேராசிரியர் சி.என். படேல் கூறுகையில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 2023-24 -ஆம் ஆண்டிற்கான தேசிய தலைவராக டாக்டர் ராஜ்சரண் ஷாஹி-யும், பொதுச் செயலாளராக ஸ்ரீயாக்வால்கா சுக்லா-வும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு பதவிகளின் பதவிக்காலம் ஒரு வருடமாகும். வரும் டிசம்பர் மாதம் 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள ஏபிவிபியின் 69 -வது தேசிய மாநாட்டில் இவர்கள் இருவரும் முறைப்படி பதவி ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 2023-24 -ஆம் ஆண்டிற்கான தேசிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் ராஜ்சரண் ஷாஹி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்வித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது, லக்னோவில் உள்ள பாபாசாகே பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இதுவரை 6 நூல்களை எழுதி, பதிப்பித்துள்ளார். 109 ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகள் தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி இதழ்கள் மற்றும் கருத்தரங்குகளில் வெளியிட்டுள்ளார். தினசரி நாளிதழ்களில் கல்வி தொடர்பான பாடங்களில் இவரது கட்டுரைகள் ஏராளமானவை இடம் பெற்றுள்ளன.

சிம்லாவில் உள்ள புகழ் பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸில் அசோசியேட்டாக இருந்துள்ளார். 2017 -ம் ஆண்டில், இவருக்கு உத்தரபிரதேச முதலமைச்சரால் சிறந்த ஆசிரியருக்கான யோகிராஜ் பாபா கம்பீர் நாத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கக் குழு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கல்விக் குழுக்களில் உறுப்பினராக உள்ளார். கல்வி மற்றும் சமூகப் பிரச்சினைகளில் ஆழ்ந்த சிந்தனையாளரான இவர், உத்தரப் பிரதேசத்தில் நிறுவனப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். 1989 முதல், தனது மாணவர் பருவம் முதலே ABVP உடன் தொடர்பு கொண்டிருந்தார்.

கோரக்பூர் மகாநகர் தலைவர் மற்றும் கோரக்ஷ் பிராண்ட் தலைவர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இந்த நிலையில், 2023 – 2024 -ம் ஆண்டுக்கான ABVP -ன் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 2023-24 -ம் ஆண்டிற்கான தேசிய பொதுச் செயலாளராக ஸ்ரீ யாக்வால்க்யா சுக்லா தேர்வு செய்யப்பட்டார். இவர், ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தலைமையகம் பாட்னாவில் அமைந்துள்ளது.

ராஞ்சி பல்கலைக்கழகத்தில் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஜார்க்கண்டின் பலமு பிரிவின் கோர்பா பழங்குடியினரின் கலாச்சாரப் புவியியல் ஆய்வு செய்துள்ளார். இதற்காக, நிலம்பர் – பிதாம்பர் பல்கலைக்கழகத்தில் புவியியலில் முதுகலைப் பட்டத்திற்கான தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

இவர் கர்வாவிலுள்ள ஸ்ரீ ஜக்ஜித் சிங் நாம்தாரி கல்லூரியின் மாணவர் சங்கத்தின் தலைவராகவும், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டவர்.

கடந்த 2018 -ம் ஆண்டு இந்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைக்கான இந்திய இளைஞர் குழுவில், பாரத நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். பள்ளி பருவம் முதலே வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்பில் இருந்தவர், 2009 -ம் ஆண்டு முதல் முழுநேர செயல்பாட்டாளராகப் பணியாற்றி வருகிறார்.

‘ஜூடன்’ போன்ற பல்வேறு வெற்றிகரமான சோதனைகள் மூலம் பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். இதன் மூலம் ஜார்கண்ட் இளைஞர்களைத் தவறாக வழிநடத்த முயன்ற சதிகளை முறியடித்துள்ளார்.

ராஞ்சி மகாநகர் அமைப்புச் செயலாளர், ஜார்கண்ட் மாநில அமைப்புச் செயலாளர், மத்திய செயற்குழு உறுப்பினர், பீகார் மண்டலத்தின், மண்டல இணை அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

Tags: abvpabvp election
ShareTweetSendShare
Previous Post

ஜாதி, மதி ரீதியில் மக்களைப் பிரிக்கும் காங்கிரஸ்: அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

Next Post

தேசிய ஹாக்கி : சண்டிகரை வீழ்த்தியது ஜார்கண்ட் !

Related News

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies