உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள உள்ள கிருஷ்ண ஜென்ம பூமிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு தரிசனம் மேற்கொண்டார்.
யமுனை ஆற்றங்கரையில் அமைந்து இருக்கும் மதுரா நகரம் முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.இங்கு உள்ள கிருஷ்ணர் கோவில் உலகப்புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு தரிசனம் செய்தார். இந்திய பிரதமர் ஒருவர் கிருஷ்ண ஜென்ம பூமிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமரின் வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுரா சென்ற பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.