தமிழகம் முழுவதும் ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது நான்காம் கட்ட பயணத்தை நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த ஜூலை 28 ம் தேதி இராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் நான்காம் கட்ட பயணத்ததை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நவம்பர் 25ஆம் தேதி (நாளை) தொடங்குகிறார். முசிறி மற்றும் துறையூரில் அவர் பயணம் மேற்கொள்கிறார்.
நவம்பர் 26 திருவையாறு, தஞ்சையிலும், நவம்பர் 27 ஒரத்தநாடு, மன்னார்குடியிலும், நவம்பர் 28 பேராவூரணி,பட்டுக்கோட்டையில் அவர் மக்களை சந்திக்கிறார்.
நவம்பர் 29 வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நவம்பர் 30 கீழ்வேலூர், நாகையில் யாத்திரை மேற்கொள்கிறார்.
டிசம்பர் 1 பூம்புகார், மயிலாடுதுறையிலும், டிசம்பர் 3 நன்னிலம், திருவாரூரிலும், டிசம்பர் 4 பாபநாசம், கும்பகோணத்திலும் அவர் மக்களை சந்திக்கிறார்.
டிசம்பர் 5 திருவிடைமருதூர், சீர்காழி, டிசம்பர் 6 காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், டிசம்பர் 7 புவனகிரி, திட்டக்குடியில் யாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை மக்களை சந்தித்து பேசுகிறார்.