சென்னை, நேரு பூங்காவில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் 79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் மற்றும் நடப்பு சாம்பியன் அபய் சிங் இருவரும் விளையாடினர்.
இதில் அபாரமாக விளையாடிய வேலவன் முதல் சுற்றில் 12-10 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தார். பின்பு நடைபெற்ற இரண்டாம் சுற்றில் 11-3 என்ற செட் கணக்கில் தனது வெற்றியை உறுதி செய்தார்.
பின்னர் கண்துடைப்பிற்காக வாய்த்த மூன்றாம் சுற்றில் 12-10 என்ற செட் கணக்கில் 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று முதன்முறையாக தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்றார்.
அதேபோல் பெண்களுக்கான ஸ்குவாஷ் இறுதி போட்டியில் டில்லியின் அனாஹத் சிங் மற்றும் தன்வி கண்ணா ஆகியோர் விளையாடினர்.
இதில் முதல் செட்டை 9-11 என இழந்த அனாஹத் இரண்டாவது செட்டில் 6-4 என முன்னிலையில் இருந்த போது, வலது முழங்கால் காயத்துக்கு தன்வி கண்ணா முதலுதவி சிகிச்சை மேற்கொண்டார் நிர்ணயிக்கப்பட்ட மூன்று நிமிடத்திற்கு மேல் தன்வி கண்ணா மெடிக்கல் டைம் அவுட் எடுத்துக் கொண்டதால், 2வது செட்டை 4 என அனாஹத் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் போட்டியில் இருந்து பாதியில் விலகுவதாச தன்வி அறிவித்தார். இதனையடுத்து அனாஹத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.