ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 26ஆம் தேதி திருப்பதி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் நவம்பர் 26ஆம் தேதி மாலை ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். அவரை ஆந்திர மாநில ஆளுநர் நசீர், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி காரில் திருமலை செல்கிறார். அன்று இரவு ரச்சனா விருந்தினர் மாளிகையில் அவர் தங்குகிறார்.
மறுநாள் காலை விஐபி பிரேக் தரிசனத்தில் பிரதமர் மோடி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். பின்னர் காலை சுமார் 10,30 மணி அளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகை முன்னிட்டு நவம்பர் 27ஆம் தேதி விஜபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா, திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.