ஆவின் விவகாரத்தில், பொய் கூறிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜூக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 48 மணி நேரம் கெடுவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது எக்ஸ் பதிவில், இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.
உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.
ஊழல் திமுக அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.
உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நீங்கள் அமைச்சராகத் தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு எனக் குறிப்பிட்டுள்ளார்.