கேரளாவில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 3 மதரசா ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலத்தில் இஸ்லாமிய போதகர்களால் இளம் குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மதரசா ஆசிரியர் நெடுமங்காடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நவம்பர் 18 ஆம் தேதி மைனர் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடக்கல் கஞ்சிரதும்மூடு பிஸ்மி பவனைச் சேர்ந்த எல் சித்திக், ஜாஸ்மின் வில்லாவைச் சேர்ந்த 28 வயதான எஸ் முஹம்மது ஷமீர் மற்றும் உத்தரப் பிரதேசம் கேரி மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூரைச் சேர்ந்த 30 வயதான முஹம்மது ரசலால் ஹக் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மலப்புரத்தில் ஒரு இளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக புதுக்கடவு முஹம்மது ஷமீர் என்ற இஸ்லாமிய போதகரை வழிக்கடவு போலீசார் நவம்பர் 22 ஆம் தேதி கைது செய்தனர்.