ISSF உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா 25 மீ. ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் ISSF உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியின் அனீஷ் பன்வாலா 25 மீ. ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்த இறுதிச்சுற்றில் இந்திய அணியின் அனீஷ் பன்வாலா 27 புள்ளிகளை பெற்று 3 ஆம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் தனதாக்கினார். முன்னதாக, ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பதக்கம் வென்றதுடன், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதிபெற்றார்.
மேலும் இப்போட்டியில் ஜொ்மனியின் பீட்டா் ஃப்ளோரியன் 35 புள்ளிகளுடன் முதலிடமும், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் லி யுஹோங் 33 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தனா்.