இந்து மதக் கொள்கைகளால் உலகில் அமைதி: தாய்லாந்து பிரதமர் பாராட்டு!
Sep 21, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து மதக் கொள்கைகளால் உலகில் அமைதி: தாய்லாந்து பிரதமர் பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்து மத விழுமியங்களான அகிம்சை, சத்தியம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் இருந்து உலகம் உத்வேகம் பெற வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதி திரும்பும் என்று தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்திருக்கிறார்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உலக இந்து மாநாடு 2023 நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே, வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே, இணைப் பொதுச் செயலாளர் சுவாமி விஞ்ஞானானந்தா, மாதா அமிர்தானந்த மயி, பிரபல திரைப்பட இயக்குனர் அக்னிஹோத்ரி, தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு, ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பலர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

மாநாட்டின் முதல் நாளான நேற்று, மாதா அமிர்தானந்த மயி, மோகன் பகவத், தத்தாத்ரேய ஹொசபலே, மிலிந்த் பராண்டே உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். தொடக்க நிகழ்ச்சியில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவரது உரை மாநாட்டில் வாசிக்கப்பட்டது.

அந்த உரையில், “இந்து மதத்தின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக இந்து மாநாட்டை தாய்லாந்து நடத்துவது பெருமையாக உள்ளது. கொந்தளிப்புடன் போராடிக் கொண்டிருக்கும் உலகம், இந்துமத விழுமியங்களான அகிம்சை, சத்தியம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் இருந்து உத்வேகம் பெற வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதி திரும்பும்” என்று தெரிவித்திருந்தார்.

‘ஜெயஸ்ய ஆயத்னம் தர்மா’ (தர்மம், வெற்றியின் உறைவிடம்) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாடு, இந்துக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சவால்களை எதிர்கொள்ளவும், சாதனைகளை கொண்டாடவும், செழுமை மற்றும் நீதி, அமைதிக்கான பொதுவான லட்சியத்தை சாதிக்கவும் வழிசெய்கிறது.

மாநாட்டில், உலக இந்து பொருளாதார மன்றம், இந்து கல்வி மாநாடு, இந்து ஊடக மாநாடு, இந்து அரசியல் மாநாடு, இந்து பெண்கள் மற்றும் இளைஞர் மாநாடுகள், இந்து அமைப்புகள் மாநாடு உட்பட 7 விதமான தலைப்புகளில், இணை மாநாடுகளும் நடைபெறுகின்றன.

60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாடு, இந்து சமூகத்தின் முன்பிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆராயவும், விவாதிக்கவும் ஒரு விரிவான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

Tags: World Hindu ConferenceThailand PM
Share
Tweet
SendShare
Previous Post

ISSF: பதக்கம் வென்ற முதல் இந்தியர் !

Next Post

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவார்கள்?

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies