இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் தனது உடல்மொழியால் பிரதமரை கேலி செய்த ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில், மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாண்டப் காமெடியன் புல்கித் மணியுடன் சேர்ந்து, உடல்மொழி மூலம் பிரதமர் மோடியை கேலி செய்தார்.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
















