மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC - சிறப்பு தொகுப்பு!
Sep 20, 2026, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 20, 2026, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் அதிகரிக்கும் வருமானம் மற்றும் நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை மக்களின் நுகர்வு முறையை மாற்றியமைக்கும் என்று HSBC வங்கி கணித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2025-ல் சுமார் 4 டிரில்லியன் டாலராக இருக்கும் இந்தியாவின் பொருளாதாரம், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, 2031-க்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. தொடர்ந்து 2036-க்குள் சுமார் 10 டிரில்லியன் டாலராக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையான வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 6.5 சதவீதமாக இருந்தால், 2050-க்குள் சுமார் 30 டிரில்லியன் டாலரையும், 7.5 சதவீத வளர்ச்சியாக இருந்தால் சுமார் 35 டிரில்லியன் டாலரையும் இந்தியப் பொருளாதாரம் எட்டும் என்று HSBC வங்கி மதிப்பிட்டுள்ளது.

அதாவது ஆண்டுக்கு ஆண்டு இந்தியக் குடும்பங்கள் நடுத்தர வருமானப் பிரிவில் இருந்து அடுத்தடுத்த உயர் வருமானப் பிரிவுகளுக்கு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து 6.5 சதவீத ஆண்டு வளர்ச்சியை இந்தியா தக்கவைத்தால், வரும் 2032-2033ம் நிதியாண்டிற்குள் குறைந்த-நடுத்தர வருமானமுள்ள நாடு என்ற நிலையிலிருந்து உயர்-நடுத்தர வருமானமுள்ள நாடாக மாறும் என்றும், 2046-2048 க்குள் அதிக வருவாய் கொண்ட நாடாக இந்தியா மாறவும் வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.

கடந்த 2000 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இது அடுத்த 25 ஆண்டுகளில் மேலும் 5 மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப் பட்டுள்ளது.

இதன் விளைவாக அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி, ஆடம்பர மற்றும் விருப்பத்தேர்வு சார்ந்த பொருட்களுக்கான செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மக்களின் இந்த நுகர்வு முறை மாற்றம் என்பது இந்தியப் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி (Mutual Funds) துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நுகர்வோர் சார்ந்த நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பிரீமியம் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பங்குகள் நீண்ட கால அடிப்படையில் பெரும் வளர்ச்சியைக் காணும் என்று கூறப்பட்டுள்ளது.

2023-ல் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 13,300-ஆக இருந்த நிலையில் 2028-க்குள் அந்த எண்ணிக்கை சுமார் 20,000-ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கைமாறக்கூடும் என்றும் இந்த வங்கியின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் அடுத்த தொழில்துறை வளர்ச்சி சுழற்சியை வடிவமைக்கக்கூடிய ஆறு முக்கிய துறைகளாக space, semiconductors, data centres, solar, electronics மற்றும் aerospace உள்ளது என Jefferies India Equity Strategy அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டுச் சுழற்சியின் பின்னணியில் தான் நுகர்வு முறை மாற்றம் ஏற்படுவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: projections.India's rising income levelsIndia's economylower-middle-incomeUnited StatesInternational Monetary FundHSBC Bank
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies