விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சுவாமி விவேகானந்தர் பேரவை சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தர் பேரவை சார்பில் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக விசர்ஜனம் செய்வதற்காக விநாயகர் சிலைகள் மேள தாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
முன்னதாக பாஜக தொழில் பிரிவு மாநில செயலாளர் விபிஎன் கோபிநாத் விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அசம்பாவிதங்களை தடுக்க 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















