அதிமுக பொன்விழா கண்ட கட்சி என்றும், தவெக இருக்குமா என்பதையே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அதிமுகவையும், தவெகவையும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஒப்பிட்டுப் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதவ் அர்ஜூனா பல கட்சிகளுக்கு சென்று வந்தவர் என்றும், அவர் வேடந்தாங்கல் பறவை போல என்றும் கூறினார். தவெகவில் நீடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் இபிஎஸ் கூறினார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் இபிஎஸ் கூறினார்.
















