மதுரையில் விவேகானந்தர் கேந்திரத்தின் அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது
விவேகானந்த கேந்திரம் மதுரை கிளை சார்பில் நடந்த இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம சீனிவாசன், நீதிபதி விக்டோரியா கௌரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பாலகிருஷ்ணனின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாறை விளக்கும் காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி விக்டேரியா கௌரி, வடகிழக்கு மாநிலங்களில் கல்வி வளர்ச்சிக்கு பாலகிருஷ்ணன் முக்கிய பங்களிப்பை வழங்கியதாக புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம சீனிவாசன், அன்பு, கருணை, மனிதாபிமானம் என அனைத்து பண்புகளும் கலந்த மனிதர் பாலகிருஷ்ணன் என நினைவுக்கூர்ந்தார். மேலும், தேசப்பணிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தர் என்றும் புகழஞ்சலி சூட்டினார்.
















