மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குதிரை பேரம் காரணமாகவே இடைத்தேர்தல் வந்துள்ளதாக தெரிவித்தார்.
புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், காவிரி நீரைப் பெற தமிழக அரசால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
















