ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் நடைபெற்றது. இதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் 252.4 புள்ளிகள் எடுத்து தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார். தங்கத்தை வெல்வதற்கான போட்டியில், சீன வீராங்கனை Taichi உடன் பலப்பரீட்சை நடத்திய வாலறிவன், நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவற விட்டார்.
முன்னதாக, சீன அணிக்கு எதிரான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவில் இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
















