76 வயதை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, உலகளாவிய பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க பாடுபட்டு வருகிறார். தனது தலைமையின் கீழ் பல பெரிய பொருளாதார நாடுகளைக் காட்டிலும் இந்தியாவை உலக அரங்கில் ஒரு சிறப்பான இடத்துக்கு முன்னேற்றியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1950-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி வாத்நகரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடி குடும்பத்தின் தேநீர்க் கடையில் வேலைசெய்து வந்தார்.
1970-களின் முற்பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழுநேர ஊழியராக இணைந்து முழுநேரமும் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
1975 ஜூன் மாதம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசரநிலையை அமல்படுத்தியபோது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது இளம் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்த பிரதமர் மோடி, குஜராத்தில் பல்வேறு மாறுவேடங்களில் தலைமறைவாக இருந்த நிலையிலும் அவசரநிலைக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்.
இன்று குஜராத் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் என இந்தியாவின் மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவர் என்ற பெருமையுடன் தொடர்ந்து தேசத்தை வழிநடத்தும் பிரதமர் மோடி, இதுவே அரசியல் ரீதியாகத் தாக்குப்பிடித்து நிலைத்திருப்பதற்கான ஒரு ஆரம்பகாலப் பாடமாக அமைந்தது.
உலகையே தலைகீழாக புரட்டிப் போட்ட கோவிட் பெருந்தொற்று 2020-ல் தாக்கிய போது பிரதமர் மோடி, துன்பத்தை வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக குஜராத் பாஜகவில் ஏற்பட்ட உள்கட்சி அரசியல் காரணமாக வெளியேற்றப்பட்ட பிரதமர் மோடி, தேசியச் செயலாளராக டெல்லி மற்றும் சண்டிகரில் கட்சிப் பணியாற்றினார். துன்பத்தை வாய்ப்பாக பிரதமர் மோடி மாற்றிய காலக் கட்டம் இதுவாகும்.
2001அக்டோபர் 7ம் தேதி 51 வயதான பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதே இல்லை பிரதமர் மோடி.
அகமதாபாத்தில் பாஜக-வின் கோட்டையாகத் திகழ்ந்த ‘எல்லிஸ் பிரிட்ஜ்’ (Ellis Bridge) தொகுதியை அன்றைய குஜராத் முதல்வரான மோடி விரும்பிய நிலையில், 1998-ல் கேசுபாய் படேல் அரசில் அமைச்சராக இருந்த பாண்டியா அத்தொகுதியை விட்டுக் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக ராஜ்கோட்-II தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்,
2022-ல் பிப்ரவரியில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய மதக் கலவரங்கள் வெடித்தன. ஏப்ரல் மாதத்திற்குள், மோடியின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியானது. கோவாவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக முன்மொழிந்தார். ஆனால் அந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2012-ல் உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியை, கோத்ரா கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.
எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியிலும், நாட்டின் புதிய அரசியல் அடையாளத்தை ‘குஜராத் மாடலை பிரதமர் மோடி உருவாக்கினார். . ‘துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) உச்சிமாநாடுகள், முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தின் மீதான கவனம் என பிரதமர் மோடி சவால்களையெல்லாம் மக்களுக்கான வளர்ச்சி மூலம் தகர்த்தார். வளர்ச்சியின் நாயகன் என்ற மக்களால் புகழப்பட்டார்.
2012-ல் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி, தேசிய அளவில் ஒரு முக்கியப் பங்கை வகிப்பதற்கான பிரதமர் மோடியின் தகுதியை உயர்த்தியது.
2013 செப்டம்பர் 13ம் தேதி 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். நாட்டின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ம் பொறுப்பேற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையும் 2024-ல் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.
கோவிட் காலத்தில் உலக மக்களுக்கு தடுப்பூசி இந்தியா வழங்கியதும் தொடர்ந்து ரஷ்யா- உக்ரைன் போர் ஏற்பட்டதை அடுத்து இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான ட்ரம்ப் இந்தியா மீது அதிகப்படியான வரை விதித்ததும், கடந்த ஆண்டு பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல் நடந்ததும் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்ததும் கடந்த பிப்ரவரியில் ஈரான் போர் தொடங்கியதும் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டதும் என சவால்களே பிரதமர் மோடியின் பாதையில் உள்ளன.
அனைத்து சவால்களையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு, நாட்டை வீறுநடை போட வைக்கும் திறன் இயல்பிலேயே பிரதமர் மோடிக்கு வாய்த்திருக்கிறது.
பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கையில் இந்த ஆண்டே மிகக் கடினமான காலகட்டம் போல தோன்றினாலும், அவரது அரசியல் பயணம் ஆரம்பத்தில் இருந்தே ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை
















