தோனி சொன்ன ஒரு அறிவுரையால் இளம் வீரர் ரிங்கு சிங் வாழ்க்கையே மாறி இருக்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயண தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன் முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 208 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யா மற்றும் இஷான் கிஷன் சிறப்பாக ரன்களை குவித்தனர்.
சூரியகுமார் யாதவின் விக்கெட்டிற்கு பிறகு இந்திய அணி சரிந்தது. அப்போது காலத்தில் இருந்த சிங் சிறப்பாக விளையாடினார் அதிலும் இந்தியா வெற்றி பெற 1 பந்தில் 1 ரன் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கும் பொது கடைசி பந்தை சிக்சராக அடித்த வெற்றி பெற வைத்தார்.
அதனை கண்ட இரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பாணியில் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்துள்ளார் என்று கூறிவந்தனர்.
தோனி, ஹர்திக் பாண்டியாவுக்கு பின் இந்திய அணிக்கு பினிஷர் இல்லாமல் இருந்த நிலையில் ரிங்கு சிங் அந்த இடத்தை நிரப்பியுள்ளார். காரணம், அவர் தோனி போல கடைசி ஓவர்களில் பதற்றம் ஆகாமல் ரன் குவிக்கிறார் என பலரும் கூறிவருகின்றனர்.
“சிறந்த பினிஷர்” என்ற அடையாளத்தால் தான் ரிங்கு சிங் வாழ்க்கையே மாறியுள்ளது. அதேபோல் இந்த அடையாளத்தை அவர் பெறவும் தோனியின் அறிவுரை ஒன்று அவருக்கு உதவி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் இடையே தோனியை சந்தித்து பேசிய ரிங்கு சிங் அவரிடம் பினிஷிங் செய்வது குறித்து ஆலோசனை கேட்டுள்ளார், அப்போது தோனி ஒரு அறிவுரையை கூறி இருக்கிறார்.
எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்க வேண்டும். ரன் குவிக்க நேரடியான ஆட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ரிங்கு சிங், தான் தோனி சொன்ன அறிவுரையை அப்படியே பின்பற்றி வருவதாக தெரிவித்தார். தான் அமைதியாக இருப்பதுடன், எதிரணியின் செயல்பாட்டுக்கு எந்த எதிர்வினையும் செய்யாமல் இருப்பதாகவும் ரிங்கு சிங் கூறினார்.
தோனியின் அந்த அறிவுரையை பத்தோடு, பதினொன்றாக கருதாமல் அதை செயல்படுத்தி சிறந்த பினிஷர் என்ற அடையாளத்தை குறுகிய காலத்தில் பெற்று இருக்கிறார் ரிங்கு சிங்.