13 வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் காலிறுதி சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் உத்திர பிரதேசத்தை ஹாக்கி தமிழக அணி வீழ்த்தியுள்ளது.
13 வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இன்று காலிறுதி சுற்றுக்கள் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் கொண்ட காலிறுதி சுற்றில் 4 போட்டிகள் நடைபெறுகிறது.
அதில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற இரண்டாம் காலிறுதி போட்டியில் ஹாக்கி தமிழகம் மற்றும் உத்திரபிரதேசம் அணிகள் விளையாடின.
இது நாக் அவுட் சுற்று என்பதால் இரு அணிகள் வெற்றி பெரும் முனைப்புடன் விறுவிறுப்பாக விளையாடி வந்தது. இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தது.
இரண்டாம் பாதி முடிவில் 27 வது நிமிடத்தில் உத்தரபிரதேசம் அணியின் மனிஷ் சஹானி ஒரு கோல் அடித்தார். பின்னர் இரண்டாம் பாதியின் கடைசி வினாடியில் அதாவது 30 வது நிமிடத்தில் சுனில் யாதவ் ஒரு கோல் அடித்தார்.
இதனால் 2-0 என்ற கணக்கில் உத்தரபிரதேசம் அணி முன்னிலை வகித்தது. பின்னர் 3 ஆம் பாதியில் 33 வது நிமிடத்தில் தமிழக அணியின் சுந்தரபாண்டி ஒரு கோல் அடித்தார்.
அதோடு வேற யாரும் கோல் அடிக்கவில்லை பின்னர் 4 ஆம் பாதியின் முடிவில் 52 மற்றும் 59 ஆகிய நிமிடங்களில் தமிழக வீரர் ஜே ஜோஷ்வா பெனடிக்ட் வெஸ்லி 2 கோலை அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இதனால் தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் உத்ரப்ரதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பெற்றது.