இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை மினி ஏலத்தில் வாங்கிக் கொள்ளும் முயற்சி நடைபெற உள்ளது.
இதனால் ஒவ்வொரு அணி வீரர்களும் எந்த வீரர்களை நீக்கி விட்டு எந்த வீரர்களை வாங்கலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு சீசனிலும் அணி நிர்வாகம் ஒவ்வொரு யுக்திகளை வைத்து விளையாடும். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய கேப்டன் ரோகித் சர்மாவை விடுவிக்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இது அந்த அணி இரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வந்த பிறகுதான் அவர்கள் ஐந்து கோப்பையை கைப்பற்றினார்கள்.
கடைசியாக 2020 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி கோப்பையை வாங்கியது. ஆனால் அதன் பிறகு மூன்று ஆண்டுகள் மும்பை அணியால் தங்களுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக சிறந்து விளங்கினாலும் பேட்ஸ்மேனாக தடுமாறி வருகிறார் என்று புகார் எழுந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சீசனில் 381 ரன்கள், 2022 ஆம் ஆண்டு சீசனில் 268 ரன்களும், 2023 ஆம் ஆண்டு சீசனில் 332 ரன்கள் என்ற வகையிலே ரோகித் சர்மா அடித்து வருகிறார். அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு தான் 400 ரன்களை தாண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரோகித் சர்மாவுக்கு 36 வயது ஆகிவிட்டதால் அவரை வெளியேற்றிவிட்டு இளம் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தையில் குஜராத் அணியுடன் ஏற்பட்டபோது ரோகித் சர்மாவை அந்த அணி கேட்பதாகவும் அதற்கு பதில் ஹர்திக் பாண்டியாவை தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
ரோகித் சர்மாவுக்கும் வயதாகி வருவதால் அவரை அனுப்பிவிட்டு ஹர்திக் சேர்க்க முயற்சிகள் நடைபெறுகிறது.ஆனால் மும்பை அணி இவ்வாறு திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானதற்கே அந்த அணி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரோகித் சர்மா இல்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியை இல்லை என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.