ஸ்பெயினின் மலாகா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் காலிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியுடன் விளையாடினார்.
இப்போட்டியில் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்குப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் போட்டியின் போது ஜோகோவிச் விளையாடுகையில் இங்கிலாந்து இரசிகர்கள் டிரம்ஸ் கொட்டி தாளம் போட்டி வெறுப்பேற்றினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச், போட்டிக்கு பிறகு பேசும் போது, வாயை மூடுங்கள், அமைதியாக இருங்கள். விளையாட்டு வீரர்களை மதியுங்கள் என காட்டமாக கூறினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.