விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தியது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளது.
இந்த 38 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் மொத்தம் 135 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று மட்டும் மொத்தமாக 18 போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் முதலாக தமிழக அணி தனது முதல் போட்டியில் விளையாடியது.
இதில் தமிழகம் மற்றும் கோவா ஆகிய இரு அணிகளும் விளையாடிய இப்போட்டியில் டாஸ் வென்ற கோவா பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் தமிழக அணி பேட்டிங் செய்தது. தமிழகத்தின் தொடக்க வீரராக சாய் சுதர்சன் மற்றும் நாராயண் களமிறங்கினர்.
இதில் நாராயண் ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க சாய் சுதர்சன் நின்று அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். சாய் சுதர்சன் மொத்தமாக 10 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 144 பந்துகளில் 125 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் தினேஷ் கார்த்திக் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 31 பந்துகளில் 47 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் பாபா அப்ரஜித் 40 ரன்களும், விஜய் ஷங்கர் மற்றும் பாபா இந்திரஜித் தலா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் தமிழகத்தின் ஸ்கோர் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 296 ரன்களை எடுத்திருந்தது.
297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவா அணியின் தொடங்க வீரர்களாக இஷான் கடேகர் மற்றும் ஸ்னேஹல் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ஸ்னேஹல் 55 ரன்களும், அடுத்து களமிறங்கிய கிஷ்ணமூர்த்தி சித்தார்த் 61 ரன்களும், தர்ஷன் மிசல் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் கோவாவின் ஸ்கோர் 10 விக்கெட்கள் இழப்பிற்கு 263 ரன்களை எடுத்திருந்தது.
தமிழக அணியில் அதிகபட்சமாக சந்தீப் 4 விக்கெட்கள், ரவி ஸ்ரீனிவாசன் 3 விக்கெட்கள், பாபா அபரஜித் 2 விக்கெட்கள், நடராஜன் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனால் தமிழக அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.