திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!
Sep 13, 2026, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 12:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருப்பதிக்கு வருகை தருகிறார். அங்கு, ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்துக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றனர். இதனால், இம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, பா.ஜ.க. தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், இன்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, மாலை திருப்பதிக்கு வருகிறார்.

தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி மற்றும் அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.

தொடர்ந்து, சாலை மார்க்கமாக திருமலைக்கு வரும் பிரதமர் மோடி, அங்குள்ள வி.ஐ.பி. விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர், நாளை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பிறகு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, மத்திய, மாநில உளவுத்துறை போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரும் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

மேலும், பிரதமர் மோடி தங்கவிருக்கும் வி.ஐ.பி. விருந்தினர் மாளிகை முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதோடு, ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Tags: PM ModiThirupathi Temple
Share
Tweet
SendShare
Previous Post

அரசு அலுவலர்களை விசாரணைக்கு அழைத்தால் பதறுவது ஏன்?

Next Post

விஜய் ஹசாரே கிரிக்கெட் : தமிழக அணி அபார வெற்றி !

Related News

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies