பாஜகவின் கோயம்புத்தூர் மாவட்ட தலைவராக ரமேஷ் குமாரை நியமனம் செய்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் நகர் மாவட்ட பொது செயலாளராகப் பணியாற்றி வந்த J. ரமேஷ்குமார், கோவை மாவட்ட புதிய தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்.
அதேபோல, கோயம்புத்தூர் நகர் மாவட்டத் தலைவராகப் பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி, அவரது விருப்பத்தின் பேரில் விடுக்கப்பட்டு, மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.