2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து 3 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
17 வது ஐபிஎல் சீசன் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் இருந்து 3 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஜெகதீசனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து முருகன் அஸ்வினும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஷாருக் கானும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.