பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மத்தியில் பொறுப்பேற்ற பிறகு, தேச நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.
குறிப்பாக, இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தி வருகிறது. ராணுவ வீரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் கௌரவம் வழங்கி வருகிறது. இதனால், சர்வதேச அளவில் இந்திய ராணுவத்தின் மதிப்பும், மரியாதையும் உயர்ந்துள்ளது.
இதனிடையே, இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், போர் திறனை சோதித்துப் பார்க்கும் வகையிலும், சீனாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில்அதாவது, 14,500 அடி உயரத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இதில், டாங்கிகள், பீரங்கி, நவீன ஆயுதங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை மூலம் மாபெரும் ஒத்திகை நடத்தியது.
‘சாங் தாங்’ என்று பெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த பயிற்சி செவ்வாய்க்கிழமை இப்பகுதியில் உள்ள உயரமான பகுதியில் நடத்தப்பட்டது.
இதில், காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட படைகள், T-72 டாங்கிகள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் போன்றவை இதில் பயன்படுத்தப்பட்டது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், எல்லையில் பதற்றம் ஏற்பட்டதால், எல்.ஏ.சி.யின் இருபுறமும் ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.