பிஆர்எஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், கேசிஆர் அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் யாரும் விரும்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் வாரிசு அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார் என்றும், ஆனால் பிஆர்எஸ் அல்லது காங்கிரசுக்கு வாக்களித்தால் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வருவார் என்றும் அவர் கூறினார்.
BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், அவர்களின் வாகனத்தை (BRS சின்னம் கார்) கேரேஜுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் கே.சி.ஆரை முதலமைச்சராக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், பின்னர் ராகுல் காந்தி பிரதமராவதற்கு கே.சி.ஆர் உதவுவார் என்றும் அமித் ஷா தனது குற்றம்சாட்டினார். பிரதமர் பதவி காலியாக இல்லை என்று கூறிய அவர், 2024 இல் நரேந்திர மோடி பிரதமராக வருவார் என்றும் அவர் கூறினார்.