மதுரையில் சாதிய தீண்டாமை காரணாக, சிறுவனை 4 பேர் வாளால் வெட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி அமைந்தது முதலே சாதிய தீண்டாமை அரங்கேறி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில், குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தனர்.
இதுவரை குற்றவாளிகளைக் காவல்துறை கைது செய்யவில்லை. மேலும், பல்வேறு பகுதிகளில் சாதிய தீண்டாமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை பெருங்குடியில் பட்டியலின கிராமத்தில் நான்கு பேர் சேர்த்து, சிறுவன் ஒருவனை வாளால் வெட்டி சாதிய தீண்டாமை வெறியோடு கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், மாரி, சசிக்குமார் ஆகிய இரு குற்றவாளிகள் மீது, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தண்டனை பெற்றுதர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால், மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.