கோவையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகத் தகவல் அறிந்த போலீசார், மாநகரக் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
100 சவரன் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நபர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திமுக ஆட்சி அமைந்தது முதலே, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாலை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த கூற்றை உண்மையாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தொடர் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.