அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பார்? எனத் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி X பதிவில்,
உடல் நிலையை காரணம் காட்டி பிணை கேட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதி மன்றம். பிணை கொடுக்கும் அளவிற்கு உடல்நிலை அப்படி ஒன்றும் மோசமில்லை என்றும் தேவையெனில் வழக்கமான பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தல். மீண்டும்…
— Narayanan Thirupathy (@narayanantbjp) November 28, 2023
உடல் நிலையைக் காரணம் காட்டி பிணை கேட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதி மன்றம். பிணை கொடுக்கும் அளவிற்கு உடல் நிலை அப்படி ஒன்றும் மோசமில்லை என்றும் தேவையெனில் வழக்கமான பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தல்.
மீண்டும் புழல் சிறைக்குச் செல்வாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பார் தமிழக அமைச்சர்? இது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.