தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக நடத்தப்படும் டிரஸ்ட்டுகள் தனியார் அறக்கட்டளை எனப்படுகின்றன.
பொது மக்கள் அல்லது பொது மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டது பொது டிரஸ்ட் எனப்படும்.
உதாரணமாக கோவில், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொது மக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே டிரஸ்ட்டை உருவாக்க முடியும். டிரஸ்ட்டின் நோக்கமானது சட்ட விரோதமாகவோ மோசடியானதாகவே இருக்கக் கூடாது.
இந்த நிலையில், நாடு முழுவதும் சேவை அடிப்படையில் செயல்படும் அறக்கட்டளைகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.
ஆனால், அறக்கட்டளை பெயரில் செயல்படும் ஒரு சில அறக்கட்டளைகள் வருமானவரித் துறைக்கு உரிய காலத்தில், ரிட்டர்னை தாக்கல் செய்வதில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அறக்கட்டளை கணக்கு வைத்திருப்பவர்கள், வருமான வரிதுறை அறிவிக்கும் தேதிக்குள் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் சம்மந்தப்பட்ட கணக்குகளின் வரிச்சலுகை ரத்துச் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வரிச் சலுகை பெறும் அறக்கட்டளைகள், தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்யும் அறக்கட்டளைகள் உள்ளிட்டவை குறித்துக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.