உத்தரகாசி சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களில் 15 பேரின் உயிரை மீட்டுக் கொடுத்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமது X பக்கத்தில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அயராத உழைப்பாலும் நம்பிக்கையாலும் இந்திய மக்களின் பிரார்த்தனைகளாலும் உத்தரகாசி சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களில் 15 பேர் மீட்கப்பட்டுள்ள செய்தி நம்பிக்கையளிக்கிறது.
மீட்பு பணியில் தொய்வில்லாமல் உழைத்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கும், மீட்பு பணியில் பணியாற்றிய அனைத்து மீட்பு குழுக்களுக்கும் அம்மாநில அரசிற்கும் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கவனித்து அதற்கான அனைத்து உதவிகளைச் செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.