ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு!
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தென்னக இரயில்வே சார்பில், காரைக்குடியில் இருந்து விருதுநகர், இராஜபாளையம் வழியாக, எர்ணாகுளத்துக்குச் சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை தினங்கள், வார விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்புத் தினங்களில் பயணிகளின் நலனுக்காக தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.

இதனை அடுத்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக,
முதன்முறையாக காரைக்குடியில் இருந்து விருதுநகர், இராஜபாளையம் வழியாக எர்ணாகுளத்திற்குச் சிறப்பு கட்டண இரயில் இயக்கப்படுவதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

வருகிற 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 28-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.

இந்த இரயில் (வண்டி எண் – 06019) எர்ணாகுளத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1.27 மணிக்கு தென்காசிக்கும் மாலை 3.43 மணிக்கு விருதுநகர் இரயில் நிலையமும் வந்தடைகிறது. இரவு 7 மணிக்கு காரைக்குடி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு இரயில் (வண்டி எண் – 06020) காரைக்குடியில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.58 மணிக்கு விருதுநகருக்கும், விடியற்காலை 3.50 மணிக்கு தென்காசிக்கும் செல்கிறது. மறுநாள் நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் இரயில் நிலையம் சென்றடைகிறது.

Tags: trainSabarimalai
Share
Tweet
SendShare
Previous Post

15 உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புக்குழு! – வானதி சீனிவாசன் பாராட்டு!

Next Post

செயல்படாத கணக்குகள் டிசம்பர் 1 முதல் நீக்கம்: கூகுள் அதிரடி தொடக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies