13 வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் 3-3 (5-3) என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி தமிழக அணி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
13 வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் முடிவுக்கு வந்துள்ளது. நவம்பர் 18 தொடங்கிய இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது.
இறுதிப்போட்டிக்கு முன்னர் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஹாக்கி தமிழகம் மற்றும் கர்நாடக ஆகிய அணிகள் விளையாடியது.
இந்தப்போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிந்தது. இரு அணிகளும் தலா 3 கோல் எடுத்தது.
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க நடந்த பெனால்டி ஷூட்-அவுட்டில் தமிழக அணி 5 கோல் மற்றும் கர்நாடகா 3 கோல் எடுத்ததால் தமிழக அணி வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்தது.
இதில் 4 வது நிமிடத்தில் தமிழகத்தின் சோமன்னா ஒரு கோல் அடித்தார். பின்னர் 12வது கௌடா ஷேஷே ஒரு கோலும், 34 வது நிமிடத்தில் ஹரிஷ் முத்தகர் ஒரு கோலும் 38 வது நிமிடத்தில் முஹம்மது ரஹீல் மௌசீன் ஒரு கோலும் அடித்தனர்.
பின்னர் தமிழகத்தின் சுந்தரபாண்டி 40 வது நிமிடத்தில் ஒரு கோலும், 52 வது நிமிடத்தில் கார்த்தி ஒரு கோலும் அடித்தனர். இதனால் இரு அணிகளும் தலா 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனால் பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது. இதில் தமிழக வீரர்கள் 5 கோல் அடித்தனர், கர்நாடக அணி முதல் கோலை தவறவிட்டது பின்னர் 3 கோலை அடித்ததால் 5-3 என்ற கோல் கணக்கில் தமிழகம் வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது.