ஜம்மு காஷ்மீர் மாற்றுத்திறனாளி மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம்!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாற்றுத்திறனாளி மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 07:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், தங்களது பள்ளிக்குச் செல்ல நல்ல சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கும் விவகாரம் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி காஜல். மாற்றுத்திறனாளி மாணவியான இவர், ஃபங்யால் பஞ்சாயத்து நிர்வாக எல்லைக்குட்பட்ட மெல்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்தான் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.

இப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் உட்பட மொத்தம் 101 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் ஒரே அணுகு சாலை தற்போது வாகனம் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு நடந்து செல்வதை தவிர வேறு வழியில்லை. அப்போது, விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் நிலவுகிறது.

எனவே, பிரதமர் மோடிக்கு காஜல் எழுதி இருக்கும் கடிதத்தில், “நான் உதம்பூர் மாவட்டத்தின் ஃபங்யால் பஞ்சாயத்து நிர்வாக எல்லைக்குள் வரும் மெல்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறேன். எங்களது பள்ளிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது.

இதனால் நான் பலமுறை கீழே விழுந்திருக்கிறேன். எனவே, நானும், எனது நண்பர்களும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில், பள்ளிக்குச் செல்ல நல்ல சாலையை ஏற்படுத்தித் தருமாறு உங்களை (பிரதமர் மோடி) கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வரைலான நிலையில், உதம்பூர் மாவட்ட உதவி வளர்ச்சி ஆணையர் ரஞ்ஜித் சிங் கோட்வாலின் கவனத்திற்குச் சென்றது.

இதையடுத்து, ரஞ்ஜித் சிங் கோட்வால் கூறுகையில், “பிரதமருக்கு எழுதிய கடிதம் மூலம் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தொடர்பாக, நான் துணை ஆணையருடன் உடனடியாக விவாதித்து, எனது துறை மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது துறை மூலமாகவோ பள்ளிக்குச் செல்லும் சாலை உட்பட பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்வேன். சிறுமியின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்” என்றார்.

Tags: PM Modijammu kashmirletterSchool Girl
Share
Tweet
SendShare
Previous Post

சாம்பியன் டிராபியை நடத்த நாங்கள் தயார் – ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்!

Next Post

தேசிய ஹாக்கி : தமிழகம் மூன்றாவது இடம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies