சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் இரவு நேர மின்சார இரயில் இரத்து செய்யப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை தாம்பர ம் இரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 29-ம் தேதி நாளை புதன்கிழமை முதல் அடுத்த மாதம் டிசம்பர் 14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார இரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்குக் கடற்கரைக்குச் செல்லும் இரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ளது.