ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் 152 பஞ்சாயத்துகளில், ‘பேக் டு வில்லேஜ்’ என்ற நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்தனர்.
நிகழ்ச்சியின் போது, அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டனர். கிராமங்களுக்குச் சென்ற அதிகாரிகளுக்கு, மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிராமங்களின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்குமாறு துறைகளின் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
ஊராட்சிகளில் சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தவும், இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறவும் அறிவுறுத்தப்பட்டனர். உள்ளூர் இளைஞர்கள் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதிகாரிகள் சிறப்பு கிராம சபைகள் நடத்தி, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அரசாங்கத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையேயான தகவல் தொடர்பு இடைவெளியைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
‘பேக் டு வில்லேஜ்’ திட்டத்தின் கீழ், அதிகாரிகள் மக்களின் வீடுகளுக்குச் சென்று, குறைகளைக் கேட்டறிந்தனர். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டம் பொது மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.