பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில் இரயில்வே துறை நவீனமும், உத்வேகமும் பெற்று வருகிறது.
அந்த வகையில், அம்ரீத் பாரத் இரயில் நிலைய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள 1,275 இரயில் நிலையங்களை மேம்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
தெற்கு இரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை உட்பட6 கோட்டங்களில் 92 இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது.
இதில், சென்னை இரயில்வே கோட்டத்தில் மட்டும் 15 இரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதில், 8 நிலையங்களின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருவள்ளூர், அம்பத்தூர் இரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. ரூ.21.67 கோடியில் அம்பத்தூர் இரயில் நிலையமும், ரூ.28.82 கோடியில் திருவள்ளூர் இரயில் நிலையமும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
நடை மேடைகளின் தரை, மேற்கூரை சீரமைப்பு, இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம், பயணிகள் நடை மேம்பாலம், தகவல் திரைகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சிறப்பு வசதிகள் இதில் இடம் பெற உள்ளன.