இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத்தூதரகங்கள் வாயிலாக 1 இலட்சத்து 40 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள தூதரகம் மற்றும் துணைத்தூதரக அலுவலகங்கள் மூலம் 1 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டு உள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.
உலகம் முழுவதும் 10 இலட்சம் விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. வணிகம் மற்றும் சுற்றுலாவிற்காக 8 இலட்சம் பார்வையாளர் விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் மாணவர்களுக்கு மட்டும் 6 இலட்சம் விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.