தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பொழிந்து வருகிறது. பகல் – இரவு எனப் பாராமல் தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் முக்கிய அலுவலங்கள் உள்ளதால், பெரும்பாலானவர்கள் தினமும் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், மழை நீர் சாலையில் ஆங்காங்கே தேங்கியுள்ளதால், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் மிகவும் அவதியைடந்து வருகின்றனர்.
தாம்பரம், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், போரூர், தி.நகர் எனப் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளமெனத் தேங்கியதால், வானகங்கள் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியப் பாலங்களில் வெள்ள நீர் வடியாததால், திரும்பிய திசை எல்லாம் தண்ணீராக காட்சி தருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர் மழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.