இரயில்வே கேட் அமைக்க நிர்மலா சீதாராமன் ரயில்வே அமைச்சர் வைஷ்ணவிடம் நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புது தில்லியில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து உரையாடினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரமேஸ்வரம் சென்றிருந்தபோது, தமிழகத்தின் இலந்தை, கானனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை ஆகிய கிராமங்களுக்கு இருப்புப் பாதையை கடந்து செல்ல தற்போதுள்ள சுரங்கப்பாதைதான் ஒரே வழி என்றும் ஆண்டு முழுவதும் பெரும்பாலான மாதங்களில் அதில் தண்ணீர் நிரம்பி வழிகிறது என்றும் அந்த கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மக்களின் குறைகள் தீர்க்க, தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலந்தை கிராமத்தில் ரயில்வே கிராசிங்கின் கீழ் சுரங்கப்பாதைக்கு பதிலாக, பாதுகாப்புடன் கூடிய ரயில்வே கேட், அல்லது மேம்பாலம் அமைக்க
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், நேரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.