சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய் அறிகுறிகள் தோன்றியுள்ளது. பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா போன்ற கொடிய பரவல் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் அங்கு பலரையும் வாட்டி வருகிறது.
சீனாவின் நிலையைக் கண்ட இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், நாள்பட்ட நோய் உள்ளவர்கள், காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பிரச்சினை உள்ளவர்கள், இருமல் பாதிப்பு உள்ளவர்கள் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என புதுச்சேரி பொதுச் சுகாதாரத்துறை சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு உத்தரவிட்டுள்ளார். இதேபோல, பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் அணிய உத்தரவிட்டப்பட்டுள்ளது.