பாரத் கௌரவ் யாத்ரா சுற்றுலா ரயிலில் சென்ற பயணிகளுக்கு ஐஆர்சிடிசி அல்லது ரயில்வே உழியர்கள் உணவு வழங்கவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் பாலிதானாவுக்கு பாரத் கௌரவ் யாத்ரா சிறப்பு சுற்றுலா ரயில் (ரயில் எண் 06911) சென்று கொண்டிருந்தது. அதில் உணவு சாப்பிட்ட 40 பயணிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த ரயில் புனே ரயில் நிலையத்தில் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரயில் நிலையத்தில் இருந்த 15 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
சுமார் 99 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பயணிகள் தங்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டனர்.
இந்நிலையில், பயணிகளுக்கு ஐஆர்சிடி அல்லது ரயில்வே ஊழியர்கள் உணவு வழங்கவில்லை என ரயில்வே நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.