கருணாநிதியும் துண்டுசீட்டா என்ன? எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர், துரைமுருகன், ஆறுகளில் மணல் அள்ளுவதில் விதிமீறல் செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
முறைகேடான பண பரிமாற்றம் செய்துள்ளார் அமைச்சர் துரைமுருகன், அதை கண்டுக்கொண்ட வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும், துரைமுருகனின் அனுமதியுடன் நடத்தப்படும் விதிகளுக்கு மீறிய மணல் குவாரைகளை ஆய்வு செய்ததில், 4730 கோடி ரூபாய்க்கு கணக்கு வரவில்லை என குறிப்பிட்டு, சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது!
”தமிழகத்தில் குற்றம் நடந்தால், அதை இந்திய அரசின் துறைகள் விசாரிக்கக்கூடாது”- என ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு வழக்கு தொடுத்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை, “விசாரிக்கலாம்” என தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது!
இந்த சூழலில் துரைமுருகனின் நண்பரும் திமுகவின் முக்கிய பேச்சாளருமான குடியாத்தம் குமரன் என்பவர், துரைமுருகன் சம்பாதித்தது 4730 கோடி மட்டுமல்ல 60,000 கோடி என தெரிவித்துள்ளார்!
அமைச்சர் துரைமுருகன், ”என்னை செல்போனை சுட்ச்சு-ஆப் செய்துவிட்டு ஓடிப்போய்விடு” என மிரட்டுவதாக ஒரு நீர்வளத்துறை அதிகாரி அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார்! என தகவல் வெளியாகியுள்ளது! இன்னொரு நிர்வாகியும் இதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ளாராம்!
ஆனால், எதுவுமே நடக்காததுபோல அமைச்சர் துரைமுருகன் கட்சி விழாவில் கலந்துக்கொண்டு, ”மு.க.ஸ்டாலின் கருணாநிதியைவிட சிறப்பாக செயல்படுகிறார்” என பேசி வருகிறார்! கருணாநிதியும் துண்டுசீட்டா என்ன?
வரலாறு காணாத மணல் கடத்தலை பார்க்கும்போது, “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்னும் சினிமா பாடல்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது! எனத் தெரிவத்துள்ளார்.