சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிரியன் கோலன் பகுதியை கடந்த 1967 -ம் ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமிப்பு செய்தன.
இந்த விவகாரத்தில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தின்படி நடக்க இஸ்ரேல் அரசு தவறிவிட்டதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவில் அதன் சட்டங்கள், அதிகார வரம்புகள் மற்றும் நிர்வாக முடிவுகள் செல்லாது என அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா பொதுச் சபையில் எகிப்து கொண்டு வந்தது.
இதற்கு ஆதரவாக இந்தியா, சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 91 நாடுகள் ஆதரவு அளித்தன. இதனால், இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட 62 நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் படு தோல்வி அடைந்தது.
இதற்கிடையே, பாலஸ்தீனம் தொடர்பான விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா கம்போஜ், இஸ்ரேலில் சிறை பிடித்த பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ததை வரவேற்றார். மேலும், மீதமுள்ள பணயக்கைதிகளை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
உலக அளவில், இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கைகளை உலக நாடுகள் வியந்து பார்த்து வருகிறது.